வெளிநாடுகள் எல்லாம்  ஒமைக்ரான் பாதிப்புக் குறைவாக இருப்பதாக கூறுகின்றன, ஆனால் இந்தியாவில் அதன் தாக்கம் வேறு மாதிரியாக உள்ளது, மொத்தத்தில் இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. இருவர் வேக்சின் செலுத்தி கொள்ளாவிட்டால் நிச்சயம் அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கபடும் சூழலே உள்ளது. 

ஐசியூவில் அனுமதிக்கப்படும் 96 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தான் என மருத்துவ நிபுணர் சாய் சுந்தர் மோகன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் ஐசியுவுக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இரண்டு அலைகள் ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் கடந்த இரண்டாவது அலையின் போது பாதிப்பு அதிகமாக இருக்க காரணமாக இருந்தது. அதேபோல தற்போது ஒமைக்ரான் என்ற வைரஸ் மூன்றாவது அலைக்கு வழி வகுத்திருக்கிறது. டெல்டாவை காட்டிலும் ஒமைக்ரான் மூன்று மடங்கு அதி வேகமாக பரவக்கூடியது என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் அதிர்ச்சியில் உள்ளன. இந்நிலையில் கடந்த 200 நாட்களில் இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு செல்பவர்களில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நிலை உள்ளது.

காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் உள்ளவர்களும் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என எத்தனை அலைகள் வந்தாலும் தடுப்பூசி மட்டுமே அதில் இருந்து பாதுகாக்கும் ஒரே ஆயுதம் என்பதால் நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல் தவணைத் தடுப்பூசியும், 60 சதவீதத்தினர் இரண்டாவது தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர். இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தொற்றினால் பாதிக்கப்படுதல் மற்றும் அதன் தீவிரத் தன்மையை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தமிழகத்தில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள தமிழக அரசு தமிழ்நாட்டில் இதுவரை 8.83 கோடி கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள பிரபல மருத்துவர் டாக்டர் சாய் சுரேந்தர் மோகன், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் நிச்சயம் ஐசியுக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது என கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசியிருப்பதாவது, ஏற்கனவே 30 , 40 ஆண்டுகளாக புகைபிடிக்கும் பழக்கத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயம் கடுமையான நுரையீரல் பாதிப்பு இருக்கும், அப்படிப்பட்டவர்களுக்கு நுரையீரல் மோசமான நிலையில் இருக்கும், அப்படிப்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் மிக எளிதாக தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் ஐசியூவில் உள்ளவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இது போன்ற நிலையில் உள்ளவர்கள் தான் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே வழி. இந்த வைரஸ் உச்சகட்டத்தை அடையும் போது நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேர் பாதிக்கப்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

முதல் அலையின் போது இந்த வைரஸின் தாக்கம் ஒருவருக்கும் புரியவில்லை, இரண்டாவது அலையும்போது காலதாமதமாகவே ஊரடங்கு போடப்பட்டது, அதனால் அதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். மூன்றாவது அறையை பொருத்தவரையில் சாதகமும் இருக்கிறது பாதமும் இருக்கிறது, சாதகம் என்னவென்றால் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்த கொண்டுள்ளனர், அதனால் ஓரளவிற்கு தைரியமாக இருக்கலாம், ஆனால் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. தென்னாப்பிரிக்கா மற்றும் மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஐசியுவில் இருக்கிற 96 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகள் எல்லாம் ஒமைக்ரான் பாதிப்புக் குறைவாக இருப்பதாக கூறுகின்றன, ஆனால் இந்தியாவில் அதன் தாக்கம் வேறு மாதிரியாக உள்ளது, மொத்தத்தில் இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. இருவர் வேக்சின் செலுத்தி கொள்ளாவிட்டால் நிச்சயம் அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கபடும் சூழலே உள்ளது. 

தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரான் இரண்டும் இணைந்து டெல்மைக்ரான் என சொல்லப்படுகிறது. அதேபோல சர்க்கரை, ரத்த அழுத்தம், நுரையீரல், இருதய பிரச்சனை, சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இப்படி இணை நோயுள்ளவர்களும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கை கழுவுதல், முகக்கவசம் அணியுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை முறையாக கடைபிடித்து காற்றோட்டம் உள்ள இடங்களில் இருந்தால் மட்டுமே இதில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.