அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவில் ஏற்கனவே உள்ள 7 கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியையும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் இணைத்து புதிய கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு, இன்னும்ஆறுமாதங்களேஉள்ள நிலையில் தமிகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிகாரமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன.. கடந்த, 2014 ஆம் ஆண்டு நடந்தநாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க., தனித்துபோட்டியிட்டு, மூன்றாவதுஇடத்துக்குதள்ளப்பட்டது. இதனால் இநத முறை வெற்றிக் கனியைப் பெறும் வகையில் கூட்டணிபேச்சு, தொகுதிபங்கீடுவிவகாரங்களைமுடித்து, தேர்தலுக்கானஆயத்தபணிகளில்ஈடுபடவேண்டும்என, தி.மு.க., தலைமைதிட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலைபொறுத்தவரையில், தேசியகட்சிகளுடன்கூட்டணிஅமைத்து போட்டியிட்டால்தான் வாக்குகளை பெற முடியும் என்ற நிலை காலகாலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன்கூட்டணிஅமைத்துபோட்டியிட, தி.மு.க., தயாராகிவிட்டது.
கடந்த வாரம் ஆங்கிலபத்திரிகைஒன்றுக்குபேட்டிஅளித்த, , ஸ்டாலின், நாடாளுமன்றதேர்தல்முடிவுக்குபிறகும், பா.ஜ.,வுடன்கூட்டணிஅமைக்கமாட்டோம்' என, உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள ராகுல்காந்தி,.தி.மு.க., தலைமையிலானகூட்டணியில், காங்கிரசுக்குஎத்தனைசீட்ஒதுக்கப்படும்என்பதும், ராகுலிடம், ஸ்டாலின்தரப்பிலிருந்துதெரிவிக்கப்பட்டுஉள்ளது.

அதன்படி, ஸ்ரீபெரும்புதுார், சேலம், ராமநாதபுரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், புதுச்சேரிஉட்பட, ஆறுதொகுதிகள்ஒதுக்கீடுசெய்யப்படஉள்ளன.ஒன்பதுகட்சிகள்கூட்டணிஅமைக்கும்போது, தமிழகத்திலிருந்து, 40 தொகுதிகள்ஒட்டுமொத்தமாககிடைக்கவாய்ப்புஇருப்பதால்,காங்கிரசுக்கு,ஆறுதொகுதிகள்பெறுவதில், ராகுல்தரப்பில், எந்தஅதிருப்தியும்தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதேபோல, வாசன்தலைமையிலான, த.மா.கா.,விற்கு, மயிலாடுதுறை, திண்டுக்கல்ஆகிய, இருலோக்சபாதொகுதிகளைஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.மக்கள்நீதிமையம்கட்சியின் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவதற்காக, தென்சென்னையைஒதுக்கலாம்என,ஸ்டாலின்விரும்புகிறார்.இதற்காக அவருடன்உள்ளகருத்துவேறுபாட்டையும்மறந்து, ஒருதொகுதிவழங்க, தி.மு.க., தயாராகஉள்ளது.

ம.தி.மு.க.,வுக்கு, ஈரோடு, விருதுநகர்என, இருதொகுதிகளும், இருகம்யூனிஸ்ட்கட்சிகளுக்கு, தலா, இருதொகுதிகள்என, தென்காசி, கோவை, நாகப்பட்டினம், பொள்ளாச்சிஆகியதொகுதிகளும்ஒதுக்கப்படலாம்என தெரிகிறது.
விடுதலைசிறுத்தைகள்கட்சிக்கு, சிதம்பரம்தொகுதியும், முஸ்லிம்லீக்கட்சிக்கு, திருச்சியும்என, எட்டுகட்சிகளுக்கும், 17 தொகுதிகளைஒதுக்கீடுசெய்துவிட்டு, 23 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடதிட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது திரைமறைவில்நடக்கும்தொகுதிபங்கீடுபேச்சு, அடுத்த ஆண்டு பொங்கலுக்குபின், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
