Asianet News TamilAsianet News Tamil

மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவிடம் 800கோடியா...!? யார் பணம் அது.? கேள்வி எழுப்பும் உதயநிதி ஸ்டாலின்.!

அ.தி.மு.க. தலைமை கொடுத்து வைத்திருந்த பெருந்தொகைக்கு வரவு, செலவு கணக்கு முழுமையாக வந்து சேராததால், கும்பகோணத்தில் இத்தகைய மர்மக் கைது அரங்கேறி உள்ளன என்று தெரிவித்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
 
800 crore from the late former minister Durakkannu ...!? Who paid for it.? Udayanidhi Stalin raises question!
Author
Tamilnadu, First Published Nov 9, 2020, 8:02 AM IST

அ.தி.மு.க. தலைமை கொடுத்து வைத்திருந்த பெருந்தொகைக்கு வரவு, செலவு கணக்கு முழுமையாக வந்து சேராததால், கும்பகோணத்தில் இத்தகைய மர்மக் கைது அரங்கேறி உள்ளன என்று தெரிவித்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

800 crore from the late former minister Durakkannu ...!? Who paid for it.? Udayanidhi Stalin raises question!

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் கும்பகோணம் மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன்.இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில் திடீரென போலீசார் கைது செய்தனர். 

இந்த விவகாரம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ரொம்ப காட்டமாக தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ‘’மக்கள்-சட்டம்-ஜனநாயகம்-ஊடகம்… இப்படி எதன்மீதும் மரியாதையோ, பயமோ இல்லை என்பதற்கு துரைக்கண்ணு விவகாரம் மேலும் ஒரு சான்று. கொள்ளை பணத்தின் ஒரு பகுதியை தமிழகம் முழுவதும் பிரித்தளித்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என நினைக்கின்றனர். ஆனால் அது இம்முறை நடக்காது.

800 crore from the late former minister Durakkannu ...!? Who paid for it.? Udayanidhi Stalin raises question!

அவர்களை மேலும் அடிமைகளாக்க தமிழகத்தை ஓவர்டைம் எடுத்து கவனிக்கும் இன்கம்டாக்ஸ், சிபிஐ… போன்றவை இவ்விஷயத்தில் மயான அமைதி காக்கின்றன. ஆர்.கே நகர் தேர்தல் பணப்பட்டுவாடா பட்டியலில் முதல்வர் உட்பட அமைச்சர்களின் பெயர் ஆதாரங்களுடன் கிடைத்தும் அவ்வழக்கு என்னானது என இதுவரை தெரியவில்லை.
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் தரப்பட்ட ஊழல் பணத்தை வசூலிக்க, ’பணத்தைக்கொடு-உடலை எடு’ என அவரின் குடும்பத்தை நெருக்கியதாக செய்திகள் வருகின்றன. துரைக்கண்ணுவிடமே 800 கோடி என்றால் ஒட்டுமொத்த பேரிடமும் எவ்வளவு இருக்கும்? அசாதாரணங்கள் இந்த ஆட்சியில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன ’’என்கிறார் உதயநிதி.

Follow Us:
Download App:
  • android
  • ios