வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிப் பொறுப்பாளர்களும், சட்டமன்ற வாரியான பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திட்டமிட்டுள்ள திமுக வலுவான தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.

 அதன்படி நாடாளுமன்ற வேலூர் தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளர்களாக  எம்.பிக்களாம டி.ஆர்.பாலு, ஜெகத் ரட்சகன், ஆர்.காந்தி, நந்தகுமார், மு.தமிழ்செல்வி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிப்பொறுப்பாளர்களாக க.பொன்முடி, எம்.எல்.ஏக்களான ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அங்கையற்கண்ணி, கீதா ஜீவன், நிவேதா முருகன், கெளதமன், எஸ்,பி.சிவகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அணைக்கட்டு தொகுதிக்கு ஐ.பெரியசாமி, செந்தில் குமார், அர.சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், செந்தில் பாலாஜி, மணிமாறன், ஆவுடையப்பன், சி.ஆர்.ராமச்சந்திரன், பூண்டி கலைவாணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே.வி.குப்பம் தொகுதி தேர்தல் பணி பொறுப்பாளர்களாக கே.என்.நேரு, தியாகராஜன், பி.மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, செல்லப்பாண்டியன், குன்னம் ராஜேந்திரன், க,சுந்தர், எஸ்.சுதர்சனம், கி.வேணு, கே.ஆர்.பெரியகருப்பன், வெ.கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு தா.மோ.அன்பரசன் மு.நாசர், முபாரக், க.செல்வராஜ், பத்மநாபன், தென்றல் செல்வராஜ், கார்த்திக், கம்பம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், சிவபத்மநாபன், எஸ்.சுரேஷ்ராஜன், அப்துல் வகாப் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

ஆம்பூர் சட்டமன்ற பொறுப்பாளர்களாக எ.வ.வேகு, சிவானந்தம், செஞ்சி மஸ்தான், டி.செங்குட்டுவன், காந்தி செல்வன், கே.எஸ்.மூர்த்தி, கோ.தளபதி, ஆர்.சிவா, நாஜிம் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். வாணியம்பாடி தொகுதிக்கு ஈரோடு முத்துசாமி, நல்லசிவன், க.முத்துசாமி, வீரபாண்டி ஆ.ராஜா, எஸ்.ஆர்.சிவலிங்கம், ராஜேந்திரன், தடங்கம் சுப்ரமணி, முத்துராமலிங்கம், கல்யாணசிந்தரம், துரை சந்திரசேகரன், மனோ தங்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 80 எம்.எல்.ஏக்களை வேலூர் தொகுதியில் களமிறக்கி விட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.