அடுத்த 2 மாதங்களில் 80 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டம்.. பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்.
வரும் நிதி ஆண்டில் இந்த நிதி பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். ஆனால் 2025-2026 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதி பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
21 வகையான செலவினங்களை ஈடுசெய்ய அடுத்த இரண்டு மாதங்களில் சுமார் 80 ஆயிரம் கோடியை அரசு கடன் வாங்க உள்ளதாக நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாடு பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் கடன் வாங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது, அப்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் தாக்கல் செய்த மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். இந்தியா சுதந்திரம் பெற்று முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை அவர் இன்று தாக்கல் செய்தார். அப்போது நாட்டின் வரவு செலவு புள்ளிவிவரங்களை அவர் வெளியிட்டார்.
அப்போது கூறிய அவர், நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்றார், வரும் நிதி ஆண்டில் இந்த நிதி பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். ஆனால் 2025-2026 ஆம் ஆண்டுக்குள் இந்த நிதி பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்க திட்டம் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையில் இருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருப்பதாகவும் பட்ஜெட்டின் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதேபோல், நடப்பாண்டில் 21 வகையான செலவினங்களை ஈடுசெய்ய அடுத்த இரண்டு மாதங்களில் சுமார் 80 ஆயிரம் கோடியை அரசு கடன் வாங்க உள்ளதாக நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். மொத்தத்தில் 2021-2022 ஆம் நிதியாண்டில் 12 லட்சம் கோடி கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், 1.53 லட்சம் கோடி மூலதனச் செலவு உட்பட ரூபாய் 34 83 லட்சம் கோடி செலவாகும் எனவும் அவர் கூறினார்.