தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இருந்து எல்லாமே ‘ஓ.எம்.ஜி.’ டீம் தான். அரசியல் கன்சல்டன்ஸி பணியை செய்யும் இந்த டீமை நம்பித்தான் பாலிடிக்ஸ் பண்ணி வருகிறார் தளபதி. அவரது டிரெஸ் கோடில் துவங்கி யாருடன் கூட்டணி என்பது வரை எல்லாவற்றையும் நிர்ணயிப்பது இந்த டீம்தான்.

பா.ம.க. தங்களுடன் இணையாமல் அ.தி.மு.க. அணியில் சேர்ந்த பின் வாக்காளர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது? என்பதை அறிய ஒரு சர்வேயை நடத்தினார் ஸ்டாலின். ஓ.எம்.ஜி. டீம் கொடுத்த ரிப்போர்ட்டை பார்த்து மனிதருக்கு மகிழ்ச்சி பாதி, கிலி மீதி. காரணம் சுமார் இருபத்து ரெண்டு தொகுதிகளிலாவது தி.மு.க. போட்டியிட்டே ஆக வேண்டும் அப்போதுதான் கணிசமான வெற்றிகளை பெற முடியும்! என்பது அந்த ரிப்போர்ட்டின் முக்கிய முடிவு. அதைவிட மிக முக்கியமாக ‘பணம் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் வாக்குகள் விழாது.’ என்று பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறதாம் அந்த டீம். 

அரண்டு போன தளபதி, டீமின் முக்கியஸ்தர்களை அழைத்துப் பேசியபோது “முன்னாடி மாதிரி ஓட்டுக்கு பணத்தை லஞ்சமாக நினைச்சு, தயக்கப்பட்டெல்லாம் மக்கள் வாங்குறதில்லை. தைரியமா வாங்கிட தயாரா இருக்கிறாங்க. காரணம் கேட்டால்...’எங்களை ஆட்சி செய்து சம்பாதிச்ச பல்லாயிரம் கோடிகளில் சில் நூறு கோடியை எங்களுக்கு செலவு பண்ணட்டுமே! அடுத்து ஆட்சியில உட்கார்ந்தாலும் பல ஆயிரம் கோடி அடிக்கத்தானே போறாங்க, பின்ன என்ன்?’ அப்படின்னு ஓப்பனா பேசுறாங்க. அதனால பணம் கொடுத்தே ஆகணும் நீங்க.” என்று சொல்லியிருக்கிறார்கள். 

இந்த ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து தனது மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் ஸ்டாலின் சார்பாக சீனியர் நிர்வாகிகள் இருவர் பேசி ‘அந்தத தொகுதிக்குள்ளே வரக்கூடிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பணப்பொறுப்பை ஏத்துக்குங்க.’ என்று சொன்னார்கள். அதற்கு 90% நிர்வாகிகளிடம் இருந்து...’எட்டு வருஷமா நம்ம கட்சி ஆட்சியில இல்லை. எங்களுக்கு எந்த வருமானமும் உருப்படியா இல்லை. கஷ்டப்பட்டு தாக்குப்பிடிச்சு கட்சி நடத்துறதே பெரிய சவாலா இருக்குது. இந்த நிலையில நீங்க தேர்தல் செலவுக்கு பணத்தை கொடுக்க சொன்னால், அவ்வளவு பனத்துக்கெல்லாம் நாங்க எங்கே போவோம்? குடும்பத்தை கூட்டிட்டு ரெண்டு எடங்களுக்கு போகாம செலவை கட்டுப்படுத்தி வெச்சிட்டு இருக்கோம். அஞ்சு பைசா கிடையாது, அதனால பணத்தை எதிர்பார்க்காதீங்க. உழைப்பை கொட்டுறோம், அவ்வளவுதான். “ என்று நெத்தியடியாக சொல்லிவிட்டார்களாம். 

இது அப்படியே ஸ்டாலினின் காதுகளுக்குப் போக, “காசில்லைன்னு சொல்றது பச்சைப்பொய். கட்சிக்கு கொடுக்க இவங்களுக்கு மனசு இல்லைங்கிறதுதான்  உண்மை. சரி, முடிஞ்சளவுக்கு கட்சி தரும், மீதிக்கு நீங்க போட்டு ஜெயிக்குறதுக்கான வழியை பாருங்க!ன்னு சொல்லிடுங்க. தோல்வியை கொண்டு வருகிற எந்த நிர்வாகியும் ரிசல்ட்டுக்கு பிறகு பதவியில இருக்க முடியாதுங்கிறதை உறுதியா சொல்லிடுங்க. “ என்று பெரும் கடுப்பாக பேசினாராம். 

இது அப்படியே மீண்டும் நிர்வாகிகளுக்கு பாஸ் செய்யப்பட்டபோது, அப்போதும் பணத்தை இறக்க சம்மதிப்பதற்கு மூக்கால் அழுகிறார்களாம். 

பேசாம அந்த ஓ.எம்.ஜி. டீமை வெச்சு, உங்க நிர்வாகிகள் யார் யார் எவ்வளவு சேர்த்திருக்காங்கன்னு ஒரு சர்வே எடுங்க தளபதி.