சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் மத்திய அரசிடம் போராடி பெறப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக  8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கக்கூடாது. மக்களின் பயன்பாட்டிற்காகவே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது என ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். இந்த திட்டத்தில் 10.000 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு இருந்தும், தமிழகத்திற்கு திட்டங்களை திமுக கொண்டு வரவில்லை என ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முன்னதாக தமிழகத்தில் தற்போது நடந்து வருவது இரட்டை ஆட்சிதான் என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஸ்டாலின் சொன்ன இரட்டை ஆட்சி இல்லை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளை கொண்ட இரட்டை ஆட்சி நடக்கிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் தமிழகத்தை 5-ஆக பிரித்து 5 பேர் ஆட்சி செய்தனர் என விமர்சனம் செய்துள்ளார்.