Asianet News TamilAsianet News Tamil

டேய் நான் ஆண்டிச்சி அம்மன் வந்திருக்கேன்டா !! பசுமை வழிச்சாலை போட்டா அதிமுக அரசு காணாமல் போகும்டா… அருள்வாக்கு சொன்ன பெண் சாமியாடி!!

8 way road farmers and public oppose and give petition to god
8 way road farmers and public oppose and give petition to god
Author
First Published Jun 29, 2018, 8:38 AM IST


சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைத்தால் இந்த அரசு காணாமல் போய்விடும் என்றும் பசுமைச் சாலைக்காக நிலம் எடுக்க விடமாட்டேன் என்றும் உங்களை எல்லாம் பாதுகாப்பேன் என சேலம் அருகே பெண் பக்தர் ஒருவர் சாமியாடி அருள்வாக்கு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 277 கி.மீ. தூரத்திற்கு 8 வழி விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலைக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதி அழிக்கப்பட உள்ளதால் பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

8 way road farmers and public oppose and give petition to god

சேலம் மாவட்டத்தில் 36.3 கி.மீ. தூரம் அமைக்கப்படும் இந்த சாலைக்கு 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 366 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான நில அளவீடு பணிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி நிறைவு பெற்றது.

பெரும்பாலும் அனைத்து கிராமங்களிலும்  விவசாயிகளும்,  பொதுமக்களும் திரண்டு வந்து அதிகாரிகளிடம் எதிர்ப்பை தெரிவித்து கண்ணீர் விட்டு கதறினர். ஆனாலும் நூற்றுக்ம் மேற்பட்ட  போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணி முடிக்கப்பட்டது.

8 way road farmers and public oppose and give petition to god

இந்த நிலையில் சேலம் அருகே உள்ள பேளூர் மெயின் ரோட்டில் உள்ள குள்ளம்பட்டி பஸ் நிறுத்தத்தை அடுத்துள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு விவசாயிகளும், பெண்களும் கருப்பு பட்டை அணிந்து கோரிக்கை மனுக்களுடன் வந்தனர்.

அந்த மனுவில் 8 வழி பசுமை சாலை திட்டப்பணியால் விவசாய நிலங்கள் அழிந்து போகும் நிலை உள்ளதால் இந்த திட்டப்பணியை நிறுத்த அம்மன் அருள் புரிய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுக்களை கோவில் பூசாரியிடம் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்தும் பொங்கலிட்டும் அவர்கள் வழிபட்டனர். அரசிடமும், அதிகாரிகளிடமும் மனுக் கொடுத்து எந்த பிரயோஜனமும் இல்லை என பொது மக்கள் தெரிவித்தனர்.

8 way road farmers and public oppose and give petition to god

அப்போது அங்கு வழிபாட்டுக்கு வந்த பார்வதி என்ற பக்தர் சாமியாடிய படி அருள் வாக்கு கூறினார். அப்போது யாருடைய நிலத்தையும் நான் எடுக்க விட மாட்டேன். அனைவருக்கும் நிலத்தை மீட்டு தருவேன், இது சத்தியம் என கூறினார்.

மேலும் 8 வழி சாலை அமைத்தால் இந்த அரசு காணாமல் போய் விடும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை வேண்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Follow Us:
Download App:
  • android
  • ios