சேலத்தில் புதிதாக கட்டுப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திறந்து வைத்தார். 

பின்னர் விழாவில் பேசிய முதல்வர் "உலகத்தரத்திற்கு ஏற்ப சாலைகளை உருவாக்கவே மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்தது. மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படுகிறது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சமாதானப்படுத்தி திட்டம் நிறைவேற்றப்படும். வளர்ச்சி, மேம்பாடு, சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்றார்.   

சேலத்திற்கு அருகே 60 ஏக்கர் பரப்பளவில் பஸ் போர்ட் அமைக்கப்படும். தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சேலம் முதல் செங்கப்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.