7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற இன்றுடன் இனிதே முடிவு பெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 6 மணிக்கு முடிவுற்றது. 

பஞ்சாப், உத்திரப்பிரதேசம்,மேற்கு வங்கம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், இமாச்சலம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலத்தில் மொத்தம் 59   தொகுதிககளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. 

ஏழு கட்டங்களிலும் பதிவான மொத்த வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அதே போன்று தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் 13 வாக்கு சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 13 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தர்மபுரி - 8, தேனி - 2 திருவள்ளூர்-  ஈரோடு கடலூரில் தலா ஒன்று என 13 வாக்கு சாவடிகளில் இனிதே நடைபெற்று முடிந்தது. 

அதே வேலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை இன்று மாலை 6.30 மணிக்கு பிறகு அனைத்து தொலைக்காட்சி மற்றும் கருத்துக் கணிப்பை நடத்திய நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட தொடங்கியுள்ளனர். 

நாடாளுமன்ற தேர்தலின் கடைசி கட்டமான ஏழாம் கட்ட தேர்தல் இன்று 59 தொகுதிகளில் நடைபெற்றது. இதன் பின்னர் தற்போது எக்ஸிட் போல் என கூறப்படும் கணிப்பு முடிவுகளை இன்று மாலை 6.30 மணி முதல் அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டை ஆளக்கூடிய பிரதமர் யார் என்பதை முன்கூட்டியே ஓரளவிற்கு கணிக்க முடியும்.

இதற்கு முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த ஏப்ரல் 11ம் தேதி காலை 7 மணி முதல் மே 19 மாலை 6.30 வரைக்கும் போல் அதாவது கருத்துக் கணிப்பை வெளியிடக் கூடாது என தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அந்த குறிப்பிட்ட நேரம் முடிவடையும் தருவாயில் வெளியிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.