சென்னை, மதுரை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 75 அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மதுரை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 75 அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுதல், கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை சுயேட்சையாக போட்டியிடுதல் முதலான காரணங்களால்
சென்னை புறநகர் மாவட்டம்
பாரதிராஜா (மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்)
மனோகரன் (மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிப் பொருளாளர்)
பத்ராஜ் (சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்)
திருமால் (ஆலந்தூர் மேற்கு பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்)
கோபால் (சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்)
ஜெயகாந்த் (197வது வட்ட துணைச் செயலாளர்)
நாவலர் தமிழ் (163வது வட்ட துணைச் செயலாளர்)
தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்
கதிரவன் (வேளச்சேரி கிழக்கு பகுதி மாணவர் அணி இணைச் செயலாளர்)
வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்
சூசை (பெரம்பூர் மேற்கு பகுதி அவைத்தலைவர்)
ஆக்கம் அகஸ்டின் (36 தெற்கு வட்ட செயலாளர்)
சந்திரசேகரன் (எ) பாய்கடை சேகர் (மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்)
சுரேஷ் ஆனந்த் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர்)
ஏழுமலை (42 வடக்கு வட்ட செயலாளர்)
விஜயகுமார் (42 மத்திய வட்ட செயலாளர்)
கோவை புறநகர் தெற்கு மாவட்டம்
சாஸ்தா சிவக்குமார் (பொள்ளாச்சி நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்)
கோவை மாநகர் மாவட்டம்
ஆட்டோ மோகன்ராஜ் (மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்க துணைத் தலைவர்)
கலாதரன் (ஒண்டிபுதூர் பகுதி ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்கப் பொருளாளர், 55வது வட்டம்)
ஆட்டோ கோபால், (ஒண்டிபுதூர் பகுதி ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்க துணைச் செயலாளர், வசந்தா மில் ஆட்டோ ஸ்டாண்டு)
சங்கர் (62வது வட்ட செயலாளர்)
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்
பரமசிவம் (தளி பேரூராட்சி செயலாளர்)
மதுரை மாநகர் மாவட்டம்
பொன்னு (மதுரை மேற்கு 1ம் பகுதி அவைத்தலைவர்)
மகாதேவன் (மதுரை வடக்கு 1ம் பகுதி புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்)
கர்ணா (மதுரை மேற்கு 2ம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்)
உல்லாச கார்த்திக் (52 வடக்கு வட்ட செயலாளர், மதுரை தெற்கு- 2ம் பகுதி)
மாயி (88 கிழக்கு வட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்)
கழுவன் (6 கிழக்கு வட்டக் கழக துணைச் செயலாளர்)
திருச்சி மாநகர் மாவட்டம்
பாலசுப்ரமணியன் (55வது வட்ட செயலாளர், உறையூர் பகுதி)
தேவரூபன் ( மாவட்ட புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்)
நாகப்பட்டினம் மாவட்டம்
வெற்றிவேந்தன் (மாவட்ட மாணவர் அணி தலைவர்)
தர்மபாலன் (மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்)
மயிலாடுதுறை மாவட்டம்
மதிவாணன் (சீர்காழி நகர பொருளாளர்)
ஐயப்பன் (சீர்காழி நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்)
மணிகண்டன் (சீர்காழி நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்)
செந்தில்குமார் (குத்தாலம் பேரூராட்சி 9வது வார்டு கழகச் செயலாளர்)
சிவகங்கை மாவட்டம்
ராஜேந்திரன் (மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர்)
கணேஷ் ஆனந்த் (சிங்கம்புணரி பேரூராட்சி 5வது வார்டு செயலாளர்)
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
R. ரவிக்குமார் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் )
S. அமுதா, (சத்தியமங்கலம் நகர மகளிர் அணி இணைச் செயலாளர்)
K. சரவணன் (அரியப்பம்பாளையம் பேரூராட்சி புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்)
A. அம்சவள்ளி (சத்தியமங்கலம் நகர 24-ஆவது வார்டு இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்)
K.M. கருப்புசாமி (மணியக்காரன்பாளையம், 11-ஆவது வார்டு, காசிபாளையம் பேரூராட்சி)
K. பாக்கியவதி (க/பெ. எஸ்.ஆர். கிருஷ்ணசாமி, நேரு நகர், 2-ஆவது வார்டு, அரியப்பம்பாளையம் பேரூராட்சி)
P.பிரபு (10-ஆவது வார்டு, சத்தியமங்கலம் நகரம் )
R. நதியா (க/பெ. ராஜமாணிக்கம், இந்திரா நகர், 9-ஆவது வார்டு, காசிபாளையம் பேரூராட்சி
ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம். ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.
