Asianet News TamilAsianet News Tamil

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை... புலம்பித் தவிக்கும் தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி..!

கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும். 

7 people including Perarivalan released ... Tamil Nadu Cong. Leader KS Alagiri
Author
Tamil Nadu, First Published Nov 7, 2020, 12:53 PM IST

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

7 பேர் விடுதலைக்கு ஆளுநருக்கு திமுக உள்பட அரசியல் கட்சியினர் அழுத்தம் தரும் நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்துத் தமிழ் கொலைக் குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.7 people including Perarivalan released ... Tamil Nadu Cong. Leader KS Alagiri

7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலைக்குற்றம் செய்தவர்களைக் குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல. பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம், காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜீவானந்தம், ராமானுஜம் போன்றவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.7 people including Perarivalan released ... Tamil Nadu Cong. Leader KS Alagiri

கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும். எனவே, முன்னாள் பிரதமரைப் படுகொலை செய்து, இந்தியாவிற்குக் கேடு விளைவித்த குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது' என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios