Asianet News TamilAsianet News Tamil

68% வன்னியர் மற்றும் 47% மீனவர்களின் வாக்குகள் பாஜக- அதிமுக கூட்டணிக்கே..! புதுவையை புரட்டி போடும் சர்வே..!

நான்கு மாநிலங்களுடன். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 30 சட்டமன்ற தொகுதிகளை உங்களுடைய புதுவையில், அதிமுக, பாஜக கூட்டணியும் , காங்கிரஸ், திமுக, கூட்டணியும் எதிரெதிராக களமிறங்கியுள்ளன. 
 

68 percentage  Vanniyar and 47 percentage fishermen vote for BJP AIADMK alliance  Survey revolutionize
Author
Puducherry, First Published Mar 16, 2021, 6:30 PM IST

இந்நிலையில் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் - சி ஃ போர் நிறுவனம் பாண்டிச்சேரியில் நடத்திய  சர்வேயில், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மாபெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  இம்மாதம் 5-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும்,  உள்ள 5077 வாக்காளர்களிடம் தனித்தனியாக சர்வே நடத்தப்பட்டது. ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் மற்றும் சி ஃ போர் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த சர்வேயில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி 23 முதல் 27 பகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறுகிறது. 

68 percentage  Vanniyar and 47 percentage fishermen vote for BJP AIADMK alliance  Survey revolutionize

அதேவேளை, காங்கிரஸ் திமுக கூட்டணி 3 முதல் ௭ தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மற்றவர்கள் ஓர் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில், அதிமுக என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி 52 சதவீதத்தில் வெற்றிவாய்ப்பை பெரும் எனவும், திமுக காங்கிரஸ் கூட்டணி 36 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று பெரும்  தோல்வியை சந்திக்கும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் பல்வேறு சாதி சமூகத்தினர் வசிக்கும் புதுச்சேரியில், ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும், என்றும் இந்த சர்வேயில் வெளியாகியிருக்கின்றன. 

68 percentage  Vanniyar and 47 percentage fishermen vote for BJP AIADMK alliance  Survey revolutionize

அதன்படி வன்னியர் மற்றும் கவுண்டர்கள் வாக்கு திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 14 சதவிகிதமே கிடைக்கும். இந்த இரு சமூகத்தினரையும் வாக்குகள் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அதிமுக கூட்டணிக்கு அதிகபட்சமாக 67 சதவிகித வாக்குகள் கிடைக்கும் எனக் கூறுகிறது. அதேபோல் மீனவர்கள் அதிகமாக வசிப்பதால், அங்கு 40 சதவிகித வாக்குகள் காங்கிரஸ் கூட்டணிக்கும், அதேவேளை 48 சதவிகித வாக்குகள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. அதிமுக பாஜக கூட்டணிக்கு அதிகபட்சமாக, நாடார்களுக்கு 51 சதவிகித வாக்குகளும், ஓபிசி பிரிவினரின்,  67 சதவிகித வாக்குகளும், முதலியார்களின் 57 சதவிகித வாக்குகளும், முக்குலத்தோரை சேர்ந்தவர்களில் 74 சதவீத வாக்குகளும், ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த 68 சதவிகித பார்க்கப்படும், பிராமணருக்கு மற்றும் மேல்தட்டு வகுப்பினர் 76 சதவீத வாக்குகளும், அதிமுக பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

68 percentage  Vanniyar and 47 percentage fishermen vote for BJP AIADMK alliance  Survey revolutionize

அதேவேளையில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு,  அதிகபட்சமாக தலித்துகள் 62 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 83 சதவிகிதம் பேரும், கிறிஸ்தவர்கள் 57 சதவீதம் பேரும் செட்டியார்கள் 48 சதவீதம் பேரும் வாக்களிக்க விருப்பம் உள்ளதாக கூறியுள்ளனர். குறைந்தபட்சம் அதிமுக, பாஜக கூட்டணிக்கு,  தலித்துகள் 21 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 6  சதவிகிதம் பேரும், கிறிஸ்தவர்கள் 8 சதவிகிதம் பேரும் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios