64 mla s support

64 எம்எல்ஏ க்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு…. அதிமுகவை கைப்பற்றப்போவதாக அதிரடி கிளப்பும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ…

சசிகலாவின் பினாமி ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் 64 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தர தயாராக உள்ளதாக சிவகாசி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலகங்காதரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அ.தி.மு.க., வின் அடிமட்ட தொண்டர்கள் யாரும் சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதாக சசிகலா அறிவித்தள்ளது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என பாலகங்காதரன் தெரிவித்துள்ளார்.

சுயநலமிக்க சசிகலாவின் உறவினர்களை அதிமுகவிற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் கட்சியை நாசமாக்கும் செயலில் இறங்கியுள்ளனர். கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களின் வாயை பணத்தால் அடைத்தனர் என பாலகங்காதரன் குற்றம்சாட்டினார்.

ஆனால் சசிகலாவை ஆதரித்த 64 எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவிற்கு செய்த துரோகத்தை எண்ணி மன சாட்சி உறுத்துவதாக தொடர்ந்து தங்களிடம் அலைபேசியில் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த 64 எம்எல்ஏக்களும் விரைவில் ஜெயலலிதாவின் உண்மை அரசியல் வாரிசு ஓபிஎஸ்சிடம் இணைய உள்ளதாக தெரிவித்த பாலகங்காதரன் , இதன் பின்னர் சட்ட ரீதியாக அதிமுகவை கைப்பற்றுவோம் என உறுதிபடத் தெரிவித்தார்.