Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்காக 63 ஆயிரம் கோடி நிதி.. அடித்து தூக்கிய நிர்மலா சீதாராமன்.

நாடு முழுவதும் மேலும் 11, 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. மதுரையிலிருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல்  அளிக்கப்படும்.
 

63 thousand crore fund for metro rail expansion in Tamil Nadu .. Nirmala Sitharaman beaten up.
Author
Chennai, First Published Feb 1, 2021, 12:17 PM IST

சென்னையில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு 63 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழக சாலை மேம்பாட்டிற்கு அவர் 1.3 லட்சம் கோடி அறிவித்துள்ள நிலையில். இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 நிதி ஆண்டிற்கான ட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் முதல்முறையாக காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது,  நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார், அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். கொரோனா நெருக்கடியில் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதை சரி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நிவாரண சலுகைகளும் வழங்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் அவர் இந்த பட்ஜெட்டை வாசித்து வருகிறார். 

63 thousand crore fund for metro rail expansion in Tamil Nadu .. Nirmala Sitharaman beaten up.

குறிப்பாக நாட்டின் ரயில்வே மற்றும் விமான துறையை மேம்படுத்த புதிய கட்டமைப்பு திட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக தமிழகத்தில் ரூபாய் 1.3 லட்சம் கோடியில் புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவித்தார்.  தமிழகம் மற்றும் கேரளாவில் ஒருங்கிணைக்கும் வகையில், சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன,  நாடு முழுவதும் மேலும் 11, 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. மதுரையிலிருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும். 

63 thousand crore fund for metro rail expansion in Tamil Nadu .. Nirmala Sitharaman beaten up.

கன்னியாகுமரி கேரளாவின் பல பகுதிகளை இணைக்கும் நவீன வசதிகளுடன்கூடிய சாலை அமைக்கப்படும் என்றார்.  அதேபோல் நாட்டின் 21 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்ற அவர், குறிப்பாக தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு 63 ஆயிரம் கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் என  அறிவித்தார்.  அவரின் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios