60 mla and 8 ministers support ... Divakaran press meet
60 எம்எல்ஏக்கள், 8 அமைச்சர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.!! அடித்துக் கூறும் திவாகரன் !!!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் டி.டி.வி.ஆதரவு 21 எம்எல்ஏக்கள், அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், தங்களுக்கு 60 எம்எல்ஏக்களும், 8 அமைச்சர்களும் முதரவு தெரிவிப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. இதனை எதிர்த்து டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தனர்.
இந்த நிலையில் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரையும் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனிடையே 19 எம்எல்ஏக்கள் தவிர அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி, விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ கலைச் செல்வன் ஆகியோரும் தற்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்க முன்நிறுத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தற்போது 60 எம்எல்ஏக்களும், 8 அமைச்சர்களும் தங்களை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
