Asianet News TamilAsianet News Tamil

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தனின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம்? திமுகவில் அதிரடி..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமாரின் உறவினர் சத்யானந்தம் ஓர் அணியாகவும், அனங்காநல்லூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். 

6 people remove from DMK..General Secretary Duraimurugan
Author
Vellore, First Published Oct 23, 2021, 6:17 PM IST

கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்த திமுக கவுன்சிலர்கள் உட்பட 6 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமாரின் உறவினர் சத்யானந்தம் ஓர் அணியாகவும், அனங்காநல்லூரைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். 

6 people remove from DMK..General Secretary Duraimurugan

நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், மாவட்டச் செயலாளரின் உறவினர் சத்யானந்தத்துக்கு எதிராக 15 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். ஆனாலும், அதிமுக சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவுடன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஒன்றியத் தலைவர் பதவியைப் பிடித்தார் திமுகவின் சத்யானந்தம். இந்நிலையில், எதிர்த்து வாக்களிக்கக் காரணமாக இருந்த திமுகவின் மற்றோர் அணியின் நிர்வாகிகள் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். 

6 people remove from DMK..General Secretary Duraimurugan

இது தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான  முரசொலியில்;- ஒன்றிய கவுன்சிலரான எதிரணி வேட்பாளர் ரஞ்சித்குமார், அவரின் தந்தை சக்கரவர்த்தி, குடியாத்தம் மேற்கு ஒன்றியச் செயலாளர் (பொறுப்பு) கள்ளூர் ரவி, குடியாத்தம் தெற்கு ஒன்றியச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் கிழக்கு ஒன்றியத் துணைச் செயலாளர் மனோஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படிடை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நீக்கப்பட்டவர்கள் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்பிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios