சுகாதாரத்துறை விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை செய்த போது 5௦ கோடி ரூபாய்க்கு மேல்  ஆவணங்கள் சிக்கியுள்ளதாக பர பரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக சுகாதாரத்தினமான  இன்று, தமிழ் நாட்டில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இன்று காலை 6 மணி முதல் தொடங்கிய சோதனை  மதியம் வரை  நீடித்து வருகிறது .  

சென்னை  மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கல்லூரிகளில் கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .

கிரீன் வேஸ் சாலையில் உள்ள  விஜய பாஸ்கரின் வீடு  மற்றும்  சேப்பாக்கத்தில்  உள்ள  எம் எல் ஏ  விடுதியில் உள்ள  அவரது  அறை , புதுக் கோட்டை  ராஜ கோபால புரத்தில் உள்ள  அலுவலகம் , இழலுப்பூரில்  உள்ள அவரது  கல்லூரி,  எழும்பூரில் உள்ள  சகோதரி வீடு உள்ளிட்ட 2௦ கும்  மேற்பட்ட  இடங்களில் வருமனவரித்துறையினர்  சோதனை நடத்தினர்.

ஆர் கே நகர இடைதேர்தல்  வரும் 12  ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  தேர்தல் ஆணையத்திற்கு  பல்வேறு கட்சிகள்  அதிமுக  அம்மா  கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பணப்பட்டு வாடா செய்வதாகவும் , அதை தடுக்க  வேண்டும் என்றும் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து  திடீரென  சோதனை நடத்திய வருமான  வரித்துறை அதிகாரிகள்  கையில்  5௦ கோடி  ரூபாய்  மதிப்புள்ள  ஆவணங்கள்  சிக்கியதாகவும்,   வாக்காளர்களுக்கு  கொடுப் பதற்கு வைக்கப்பட்டிருந்த  பரிசு  பொருட்களும்,  கைப்பற்ற பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன

 இந்த அதிரடி சோதனையால்  தேர்தல் ஆணையம்  ஆர் கே  நகர் இடைதேர்தலை  தள்ளி வைக்கப்பட      ஆலோசனை  நடத்தி வருவதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன .