”இந்தி திணிப்பை எதிர்ப்போம்”.. கலைஞர் சிலையின் கீழ் பொறிக்கப்பட்ட ”5 கட்டளைகளின் ஹைலைட்”
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைக்கு கீழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி உள்ளிட்ட 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார்.
மேலும் படிக்க: முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு..குடியரசு துணைத் தலைவர் திறந்து வைப்பு..நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், நாசர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இதனிடையே திறத்து வைக்கப்பட்ட கருணாநிதி சிலையின் கீழே "இந்தி திணிப்பை எதிர்ப்போம்" என்பன உள்ளிட்ட 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன.
சிலையின் கீழே பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள்:
1. வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்
2. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
3. ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்
4. இந்தி திணிப்பை எதிர்ப்போம்
5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி
இதைத்தவிர்த்து சிலை திறப்பு விழாவை முன்னிட்டு கருணாநிதியின் நினைவிடம் " ஊருக்காக வாழ்ந்தவர் சிலையானார், உழைப்பின் கைகளால் உயிரானார்" என்ற வாசகத்துடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் படிக்க: நவீன தமிழகத்தின் தந்தை ”கலைஞர் கருணாநிதி”..சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்