முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு..குடியரசு துணைத் தலைவர் திறந்து வைப்பு..நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி முழு உருவ சிலையை குடியரசு துணைதலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். 

VP Venkaiah Naidu Inaugurates 16-ft Tall Statue Of Late Karunanidhi In Chennai

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி முழு உருவ சிலையை குடியரசு துணைதலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். முன்னாள் பிரதமர் கருணாநிதியின் பிறந்த தினம் வரும் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி ,சென்னை ஓமந்தூரார்  அரசினர் தோட்ட வளாகத்தில் அவருக்கு முழு உருவ சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

VP Venkaiah Naidu Inaugurates 16-ft Tall Statue Of Late Karunanidhi In Chennai

இந்நிலையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துக்கொண்டு, ரூ.1.07 கோடி செலவில் 16 உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் , அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

VP Venkaiah Naidu Inaugurates 16-ft Tall Statue Of Late Karunanidhi In Chennai

மேலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் இந்த விழாவில் கலந்துக்கொண்டனர். நீண்டநாட்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VP Venkaiah Naidu Inaugurates 16-ft Tall Statue Of Late Karunanidhi In Chennai

இதனிடையே சிலையின் கீழ் அண்ணாவழியில் அயராது உழைப்போம், இந்தி திணிப்பை எதிர்ப்போம் உள்ளிட்ட 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க: பொய் வழக்கு போடுவதா..? இதோடு உங்க அடாவடியை நிறுத்தி கொள்ளுங்கள்.. எடப்பாடி எச்சரிக்கை..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios