வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. 

இதில் அதிமுக 20… பாஜக 5 … பாமக  7… தேமுதிக 4 .. புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமாகா, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள்  தலா ஓர் இடத்திலும் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் யார்? யார் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் எச்.ராஜாவும் , ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசையும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.