Asianet News TamilAsianet News Tamil

லடாக் எல்லையில் 40ஆயிரம் சீன வீரர்கள்..! திமிர் தனத்தை காட்டும் சீனா..! பதிலடிக்கு தயாராகுமா? இந்தியா..!

சீனா தனது குறுக்கு புத்தியை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றது. எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் பேசிய பேச்சுக்கும் உடன்பாட்டிற்கும் மதிப்பு கொடுக்காமல் எல்லையில் சண்டியர் தனத்தை இந்தியாவிடம் காட்டிவருகின்றது.பேச்சுவார்த்தையை மீறி லடாக் எல்லையில் 40ஆயிரம் சீன படைவீரர்களை நிறுத்தியுள்ளது. எல்லையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
40000 Chinese soldiers on Ladakh border ..! China showing arrogance ..! Ready for retaliation? India ..!
Author
China, First Published Jul 22, 2020, 11:35 PM IST

சீனா தனது குறுக்கு புத்தியை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றது. எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் பேசிய பேச்சுக்கும் உடன்பாட்டிற்கும் மதிப்பு கொடுக்காமல் எல்லையில் சண்டியர் தனத்தை இந்தியாவிடம் காட்டிவருகின்றது.பேச்சுவார்த்தையை மீறி லடாக் எல்லையில் 40ஆயிரம் சீன படைவீரர்களை நிறுத்தியுள்ளது. எல்லையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

40000 Chinese soldiers on Ladakh border ..! China showing arrogance ..! Ready for retaliation? India ..!

விமான பாதுகாப்பு அமைப்புகள், கவச வாகனங்கள் மற்றும் நீண்ட தூர பீரங்கிகள் போன்ற பல ஆயுதங்களைக் கொண்ட கிட்டத்தட்ட 40,000 வீரர்களை தொடர்ந்து பராமரிப்பதால் சீனர்கள் எந்தவிதமான பின்வாங்கல் அறிகுறிகளையும் காட்டவில்லை.பாங்கோங் த்சோவில், இரு படைகளும் 4-5 கிலோமீட்டர் இடைவெளியில் நிலைகொண்டுள்ள.

ரோந்து புள்ளி 14இல், சீன இராணுவம் 1.5 கி.மீ. பின்வாங்கியதால் இரு படைகளும் 3 கி.மீ இடைவெளியைக் கொண்டுள்ளன.ரோந்து புள்ளி 15இல், இரு படைகளும் 8 முதல் 10 கி.மீ இடைவெளியில் நிலைகொண்டுள்ளன.ரோந்து புள்ளி 17Aஇல், இரு தரப்பினரும் 40-50 வீரர்களை நிலைநிறுத்தியுள்ளனர். இரு படைகளுக்கும் இடையில் 800 மீட்டர் தூரம் உள்ளது.

40000 Chinese soldiers on Ladakh border ..! China showing arrogance ..! Ready for retaliation? India ..!

கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில், சீன பின்வாங்கினால், நிலம் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும் என்ற எண்ணத்தால் சீனா தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஜூலை 14-15 அன்று நடைபெற்ற கார்ப்ஸ் கமாண்டர் மட்டக் கூட்டத்தில் இரு தரப்பினரும் மேலும் வீரர்கள் பின்வாங்குவதை கண்காணிப்பார்கள் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.இந்த நிலையில் சீனா படைகளை தக்கவைத்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios