திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் 40,000 கண்மாய்களை தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளதாக இளைஞரஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்தள்ளார். 

திமுக இளைஞரணி சார்பில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞர் அணியினர் மதுரை கிழக்கு தொகுதி நாராயணபுரம் குளத்தை தூர்வாரி கரையை மேம்படுத்தி நடைபாதை அமைத்துள்ளனர். அதை மக்கள் பயன்பாட்டிற்கு தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''தமிழகத்தில் உள்ள குளங்களை தூர்வாரி சீர் செய்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம். 

இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நாளை திருவாரூரில் தூர்வாரும் பணி தொடங்க உள்ளோம். முதல் கட்டமாக 2 குளங்களை தூர்வார உள்ளோம். தொடர்ந்து தமிழகம் முழுவதும் 40,000 கண்மாய்களை தூர்வார முடிவெடுத்துள்ளோம். 

வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் வந்தால் தான் முதலீடுகள் குறித்து தெரியும். ஏற்கனவே தமிழகத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எந்தப்பலனும் கிடைக்கவில்லை எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.