ஒரு பெண்ணை கட்டி அந்த பெண்ணுக்கு துரோகம் செய்துவிட்டு மொபைல் போன் மூலம் பல பெண்களை மயக்கி திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து கம்பி எண்ண வைத்திருக்கிறார்கள்.இந்த சம்பவம் பெரும் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். திருச்சி் ஜெயில் கார்னரில் உள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மகாலிங்கத்தின் மகன் கார்த்தி(26). இவருக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமதி(21) என்ற பெண்ணுடன் தொலைபேசி மூலம் நட்பு ஏற்பட்டு காதலித்து, கடந்தாண்டு சமயபுரம் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
 
இந்நிலையில் கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சுமதி அவரது தொலைபேசியை பார்த்துள்ளார். அப்போது, அவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கார்த்திக்கிடம் கேட்டபோது சுமதிக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சுமதி அளித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கார்த்திகை கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.