Asianet News TamilAsianet News Tamil

4 ஆண்டு கால ஒருங்கிணைந்த B.Ed.,படிப்பு இப்போது தொடங்கப்படாது.. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் முடிவு.

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்புக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படும், 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்த பின் மாணவர்களுக்கான வெளியேறும் வாய்ப்பு தரப்படாதது உள்ளிட்டவற்றில் குழப்பம் நீடிப்பதால், வரும் 2022-2023-ம் கல்வியாண்டில் தான் 4 ஆண்டு கால படிப்பு அமலுக்கு வரும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ( NCTE ) தெரிவித்துள்ளது.

4 year Integrated B.Ed., study will not start now .. National Teacher Education Board Decision .
Author
Chennai, First Published May 24, 2021, 10:28 AM IST

4 ஆண்டு கால ஒருங்கிணைந்த B.Ed., படிப்பு இப்போது தொடங்கப்படாது என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. பட்டப்படிப்பு முடித்த பின், B.Ed., பயிலும் மாணவர்களின் வசதிக்காக B.A., B.Ed., B.Sc., B.Ed., ஆகிய பிரிவுகளில் 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த படிப்பு வரும் 2021-2022-ம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ( NCTE)முன்னர் அறிவித்திருந்தது. 

4 year Integrated B.Ed., study will not start now .. National Teacher Education Board Decision .

பட்டப்படிப்பு முடித்த பின், B.Ed., படிப்பை தனியாக படிப்பதால் ஓராண்டு காலம் கூடுதலாக செலவிட நேரும் என்பதால், ஒருங்கிணைந்த 4 ஆண்டு கால படிப்பை அறிமுகம் செய்வதாக NCTE தெரிவித்திருந்த நிலையில், 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதில் திடீர் சிக்கல் எழுந்ததால் அது இப்போது நடைமுறைப்படுத்தப்படாது என்று NCTE அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்புக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படும், 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்த பின் மாணவர்களுக்கான வெளியேறும் வாய்ப்பு தரப்படாதது உள்ளிட்டவற்றில் குழப்பம் நீடிப்பதால், வரும் 2022-2023-ம் கல்வியாண்டில் தான் 4 ஆண்டு கால படிப்பு அமலுக்கு வரும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ( NCTE ) தெரிவித்துள்ளது.

4 year Integrated B.Ed., study will not start now .. National Teacher Education Board Decision .

முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள தனியார் B.Ed., கல்லூரிகள் 4 ஆண்டு கால படிப்பை வரும் கல்வியாண்டு முதல் தொடங்குவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், NCTE-இன் புதிய முடிவால் அது ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios