அமமுகவில் இருந்து 4 நிர்வாகிகளை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். 

அமமுகவில் இருந்து 4 நிர்வாகிகளை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அமமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருககண்ணன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் இசக்கிமுத்து, ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியக் செயலாளர் இயிலகுமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்க்படுகிறார்கள்.

ஆகையால், கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.