அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை... காலியானது ஓசூர் தொகுதி... எடப்பாடி அவசர ஆலோசனை!

https://static.asianetnews.com/images/authors/f71a4c12-3caf-58c5-bcf5-5f738e9fba48.jpg
First Published 7, Jan 2019, 4:26 PM IST
3years jail to tn minister balakrishna reddy- edappadi discussion!
Highlights

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால் அவரது அமைச்சர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திடீர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால் அவரது அமைச்சர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திடீர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகாரில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 10,000 அவருக்கு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மக்கள் பிரதிநிதுத்துவ சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களின் பதவி பறிக்கப்படும். ஆகையால், பாலகிருஷ்ணா ரெட்டியின் அமைச்சர் பதவி பறிபோவதோடு உடனடியாக அவர் எம்எல்ஏ தகுதையையும் இழப்பார். இதனால் அவரது ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

loader