ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் அருப்புக்கோட்டை, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை உட்பட தமிழகத்திலுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. நேற்றும் இந்தச் சோதனை தொடர்ந்தது. சுமார் 38 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்தச் சோதனை நேற்றுடன் முடிவடைந்தது. இந்தச் சோதனையில் 170 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்று  முன்தினம்  செய்யாதுரையின் குடும்பத்தை மட்டுமேதான் குறிவைத்துக் களமிறங்கினார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் டீம். ஆனால் சில மணி நேரங்கள் கழித்துதான்  கதை வேறு களத்திற்கு  மாறியது.

ஆமாம், நேற்று முன் தினம் இரவு கிடைத்த அதிகாரபூர்வ உத்தரவை அடுத்து, அதிகாலை சென்னை, மதுரை, விருதுநகர் என்று செய்யாதுரையின் குடும்பத்தை மட்டுமே குறிவைத்துக் களமிறங்கினர் வருமான வரித் துறை அதிகாரிகள். அந்த வகையில் சென்னையில் இருக்கும் செய்யாதுரையின் மகன் நாகராஜன் வீட்டுக்கும் நேற்று முன்தினம் காலை 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் டீம் சென்றது.

வீட்டுக்குள் சென்றதும் முகத்தில் ஒரு சிறிய  பதற்றம் இல்லாமல்  ஸ்மைல் செய்திருக்கிறார் நாகராஜன். மிக கேஷுவலாக, ‘வாங்க... வாங்க’ என்று நாகா வரவேற்க அதிகாரிகள் ஆச்சர்யத்தில் பார்த்துள்ளனர்.

‘’என்ன சார்... நாங்க வர்றது முன்னாலயே உங்களுக்குத் தெரியுமா? வி ஆர் இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட்’ என்று சில அதிகாரிகள் நாகராஜனிடம் கேட்டே விட்டனர். ’’நீங்க வர்றது எனக்கு எப்படி சார் தெரியும். வீட்டுக்கு வந்திருக்கிங்களேனு உங்கள உபசரிச்சேன்’’ என்று நாகராஜ் பதில் தர, அடுத்த சில நிமிடங்களில் வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாய் பிரித்து மேய ஆரம்பித்தனர் அதிகாரிகள்.

சுமார் ஒரு மணி நேரம் ஆனது. நாகராஜன் பதற்றமில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். ஆனால் தேடச் சென்ற அதிகாரிகளுக்கு லேசான பதற்றம். ஒவ்வொரு அறையாய் தேடிய அதிகாரிகள் மீண்டும் ஒன்று கூடி கையை பிசைந்த  அதிகாரிகள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர். அப்போது உள்ளே இருந்து ஒரு குரல் சார் இங்க வாங்க என்று, அங்கு சென்று பாத்ததும் உள்ளே இருதது ஒரு அதிகாரி டைனிங் டேபிள் டிராவில் எக்கச்சக்கான சாவிகள். கார் சாவிகள், அறை சாவிகள், லாக்கர் சாவிகள் என்று விதம் விதமான சாவிகள் அங்கே இருந்தன. அப்போதுதான் அதிகாரிகளின்  சுறுசுறுப்பாக களத்தில் குதித்தனர்.

“இந்த சாவிகள்லாம் என்ன சார்? என்ன இத்தனை சாவி வச்சிருக்கீங்க?’’ என்று அதிகாரிகள் கேட்க, நாகராஜனின் முகத்தில்  பதற்றம் பற்றிக் கொண்டது. நாகா முகக்  மூவ்மென்ட்டில் சில விஷயங்களை உணர்ந்த அதிகாரிகள், அதுவரை மேற்கொண்ட விசாரணை அணுகுமுறையை கொஞ்சம் டைட் செய்துள்ளனர்.

‘’என்ன மிஸ்டர் நாகராஜன்... என்ன இத்தனை சாவிகள்? இதெல்லாம் எந்த பூட்டுகளோட சாவிகள்?’’ என்று கேட்க ”அதெல்லாம் கம்பெனி கார், வீடுகளோட சாவிகள் சார்...’’ என்று நாகராஜன் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த டிராவில் இருந்து ஒரு நீண்ட லிஸ்டும் கையில் கிடைக்க நாகராஜன் தலையில் கை வைத்துவிட்டார்.

அந்த பேப்பரில் சென்னையில் பல இடங்களைக் குறிப்பிட்டு ஒவ்வொரு இடத்திலும் 100, 200, 100 கேஜி என்று எழுதப்பட்டிருந்தது. அந்தப் பேப்பரைப் பார்த்ததும் ரெய்டு கேம் வருமான வரித்துறை அதிகாரிகளின் பக்கத்துக்கு வந்தது.

அடுத்தடுத்த கேள்விகளால் துளைக்கப்பட்டார் நாகராஜன். அதன் விளைவாக அங்கிருந்தே ஒரு டீம் கிளம்பி, நாகராஜனின் டிரைவர் வீட்டுக்குச் சென்றது.

அங்கே  டிரைவரிடம், பணம், நகையெல்லாம் எங்கங்க வைக்கச் சொன்னாரு உங்க ஓனரு?’’ என ஆரம்பித்த, ஐடிக்கு  ‘எனக்குத் தெரியாது சார் அதெல்லாம் என ஆரம்பத்தில் டிரைவர் கொஞ்சம் கெத்தா உதார் விட்ட டிரைவரை அடுத்த நிமிடம் பேண்ட் சட்டையை உருவி ஜட்டியோடு உட்காரவைத்து அடுத்த கட்டத்துக்கு விசாரணையை நகர்த்தினார்கள் அதிகாரிகள். அதன் பிறகுதான் சென்னை மாநகரின் சில இடங்கள் தொடங்கி பெரம்பூர் வரை  என மொத்தமாக கொட்டினாராம் டிரைவர்.

டிரைவர் சொன்ன வீடுகள் எல்லாமே செய்யாதுரை, நாகராஜன் ஆகியோரின் நண்பர்களுடையது. இன்னும் சில பேர் இவர்களிடம் கடன் வாங்கியவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ரெய்டுக்கு முந்தைய நாளே போன் போட்டு, ‘நம்ம வீட்ல கொஞ்சம் பிரச்னை.... அதனால சில பேப்பர்களை வச்சி காரை மட்டும் உங்க வீட்ல நிறுதிக்கிறோம். எல்லாம் முடிஞ்சதும் எடுத்துக்குறோம்’’ என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களும் அதற்கு ஓகே சொல்லியிருக்கிறார்களாம்.

இந்தப் பின்னணியில்தான் நாகராஜனுக்கு அறிமுகமான பலரது வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் இருந்து கட்டுகட்டாக பணம், நாகராஜனின் நண்பர் ஒருவரின் வீட்டில் பூட்டப்பட்ட பாத் ரூமில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகள் என்று கைப்பற்றியிருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

கார்கள் நிறுத்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களிடமும் விசாரணையைத் தொடங்க திட்டமிட்ட நிலையில், ‘’ அது எல்லாமே என் பணம்தான். நானே அதற்கு வரி கட்டுகிறேன்” என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார் நாகராஜன்.