Asianet News TamilAsianet News Tamil

வங்கிக் கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த 3 லட்சம் லஞ்சம். தனியார் வங்கி அதிகாரி கைது. சிபிஐ போலீசார் அதிரடி.

தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வழக்கை ஸ்ரீவன்த் விஷ்வேஷ்வரன் சாதகமாகவும் ஒரே நேரத்தில் அவரால் இயன்ற தொகையை செலுத்துவதற்கு அனுமதி வழங்க 3 லட்சம் ரூபாய் வழங்கவேண்டுமென அந்த கிளையின் அதிகாரி ராஜேந்திரன் என்பவர் ஸ்ரீவன்த் விஷ்வேஷ்வரனிடம் கேட்டுள்ளார்.

 

3 lakh bribe to repay bank loan in one installment. Private bank officer arrested. CBI Police Action.
Author
Chennai, First Published Feb 19, 2021, 4:20 PM IST

வங்கிக் கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த அனுமதி வழங்க 3 லட்சம் லஞ்சம் கேட்ட தனியார் வங்கி அதிகாரியை  சிபிஐ போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீவன்த் விஷ்வேஷ்வரன் இவர் பிரபல தனியார் வங்கியின் சென்னை கிளை ஒன்றில் (standard chartered bank )தனது சொந்த தேவைக்காக கடன் வாங்கியுள்ளார். அசல் மற்றும் வட்டியை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த அவர் கடன் தொகையில் இருந்து ஒரே தவணையாக தன்னால் இயன்ற கடனை  திருப்பிப் செலுத்த வங்கி தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளார். 

3 lakh bribe to repay bank loan in one installment. Private bank officer arrested. CBI Police Action.

தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வழக்கை ஸ்ரீவன்த் விஷ்வேஷ்வரன் சாதகமாகவும் ஒரே நேரத்தில் அவரால் இயன்ற தொகையை செலுத்துவதற்கு அனுமதி வழங்க 3 லட்சம் ரூபாய் வழங்கவேண்டுமென அந்த கிளையின் அதிகாரி ராஜேந்திரன் என்பவர் ஸ்ரீவன்த் விஷ்வேஷ்வரனிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஸ்ரீவன்த் விஷ்வேஷ்வரன்  சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவில் அளித்த புகாரின் பேரில் ராஜேந்திரன் கையும் களவுமாக பிடிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டனர். 

3 lakh bribe to repay bank loan in one installment. Private bank officer arrested. CBI Police Action.

அதன்படி  லஞ்ச தொகையயை பெற்றுக் கொள்வதற்கு இன்று கோயம்பேட்டில் உள்ள தனியார் கிளப்பில் ராஜேந்திரனை வரவழைத்து அங்கு அவர ஸ்ரீவன்த் விஷ்வேஷ்வரனிடம் லஞ்சப்பணத்தை பெறும்போது சிபிஐ அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரி ராஜேந்திரனை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை இடவும் திட்டமிட்டுள்ளனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios