Asianet News TamilAsianet News Tamil

விநாயகர் சதுர்த்திக்கு 3 நாட்கள் விடுமுறை... சொந்த ஊர் செல்லும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்..!

இன்றைய கூட்டம் முடிந்த பிறகு 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
 

3 days holiday for Ganesha Chaturthi ... Ministers, MLAs going home
Author
Tamil Nadu, First Published Sep 9, 2021, 10:46 AM IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிடு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர்ச்சியாக சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ம்தேதி தொடங்கியது. அன்று பொது பட்ஜெட்டும், 14-ம் தேதி வேளாண்மை தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அமைச்சர்களின் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து தினமும் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

3 days holiday for Ganesha Chaturthi ... Ministers, MLAs going home

இந்தநிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை நாள். இதையொட்டி சனிக்கிழமையும் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர்ச்சியாக சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்றைய கூட்டம் முடிந்த பிறகு 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.3 days holiday for Ganesha Chaturthi ... Ministers, MLAs going home

வருகிற 13-ம்தேதியுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறுகிறது. அன்று கடைசி நாள் கூட்டம். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உள்ள துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது. காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு திங்கட்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகிறார். அன்றுடன் இந்தக் கூட்டம் நிறைவு பெறுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios