Asianet News TamilAsianet News Tamil

3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்... உச்சநீதிமன்றத்தில் 28-ம் தேதி விசாரணை..!

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மார்ச் 28-ம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

3 constituencies by-election...supreme court enquiry
Author
India, First Published Mar 25, 2019, 11:27 AM IST

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மார்ச் 28-ம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 3 constituencies by-election...supreme court enquiry

தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 3 constituencies by-election...supreme court enquiry

இந்நிலையில் இந்த வழக்கை மார்ச் 28-ம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த முடியுமா என தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கருத்து கேட்க வாய்ப்புள்ளது. பிறகு தேர்தல் ஆணையத்திற்கு உடனே 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடவும் வாய்ப்புள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios