Asianet News TamilAsianet News Tamil

3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு... சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் எடப்பாடி..!

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடுத்த வழக்கை திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 AIADMK mlas case withdrawing
Author
Tamil Nadu, First Published Jul 26, 2019, 5:48 PM IST

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடுத்த வழக்கை திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், 3 பேரையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக தலைமை முயற்சி மேற்கொண்டது. இதனையடுத்து, 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சபாநாயகரை சந்தித்து மனு அளித்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். 3 AIADMK mlas case withdrawing

இதனையடுத்து, தங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். மேலும், சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவால் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியும் தப்பியது. இதனிடையே, அதிருப்தியில் இருந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் முதல்வர் எடப்பாடி முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தனர். 3 AIADMK mlas case withdrawing

இந்நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தொடுத்த வழக்கை 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ-க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வரும் 30-ம் தேதி திரும்ப பெற உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios