Asianet News TamilAsianet News Tamil

3 வேளாண் சட்டங்கள்.. சிஏஏவை எதிர்த்து தீர்மானம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3 Agricultural Laws .. CAA  against Resolution... CM Stalin Announcement
Author
Tamil Nadu, First Published Jun 22, 2021, 2:56 PM IST

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது, மானாமதுரை திமுக எம்எல்ஏ தமிழரசி, மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்களை எடுத்துவைத்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், எம்எல்ஏ தமிழரசி மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை இங்கே வைத்திருக்கிறார்கள்.

3 Agricultural Laws .. CAA  against Resolution... CM Stalin Announcement

இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், உழவர் நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள உழவர் பெருமக்களின் உணர்வுகளையும், விருப்பத்தையும் இந்த மன்றம் முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

3 Agricultural Laws .. CAA  against Resolution... CM Stalin Announcement

ஆனால், இந்த அவையினுடைய முதல் கூட்டத் தொடர் என்ற முறையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, நிறைவேற்றுவது இத்தகைய தீர்மானங்களை இருக்காது முன்மொழிந்து என்று கருதுகிற காரணத்தினால்தான், வரவிருக்கக்கூடிய வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின்போது, அந்த உரிய தீர்மானத்தைக் கொண்டுவந்து, நிச்சயமாக ஒன்றிய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசினுடைய எதிர்ப்பை முழு மூச்சோடு பதிவு செய்து, அவற்றைத் திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

3 Agricultural Laws .. CAA  against Resolution... CM Stalin Announcement

அதைப்போலவே, இன்னொன்று ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அதனையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் அமைகின்றேன். தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios