பொதுமக்கள் சிலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர 6 இடங்களாக பிரிக்கப்பட்டு கொரோனாகாலகட்டம் என்பதால் 14,000 பேருந்துகள் மட்டுமே சென்று கொண்டிருந்த நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளது என்றார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 3 லட்சத்து 54 ஆயிரத்து 267 பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று, உற்றார் உறவினர்களுடன் கொண்டாடும் வகையிலும், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்லும் வகையிலும் தமிழக அரசு போக்குவரத்து ஏற்பாடுகளைசெய்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2ஆம் தேதி முதல் வரும் 8 ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்க உள்ளது.

எனவே பொதுமக்கள் சிரம மின்றி வெளியூர்களுக்குச் செல்லும் வகையில் தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 3 ஆயிரத்து 506 பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளது. அதில் சென்னையில் இருந்து 9 ஆயிரத்து 806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6834 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்பட்ட உள்ளது. இதேபோல் சென்னை, கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம் கே.கே நகர், தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்தும் தாம்பரம் ரயில் நிலையம் என ஆறு வழித்தடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட ஆரம்ப நாளில் மழை காரணமாக மக்கள் கூட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தியுள்ளனர்.

அதேபோல் மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் பயணித்துள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் பிற ஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னைக்கு வர 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் தினசரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 2100 பேருந்துகளுடன் 4,319 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 5 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 17,719 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து சென்னை தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.ஆர் ராஜகண்ணப்பன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொதுமக்கள் சிலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர 6 இடங்களாக பிரிக்கப்பட்டு கொரோனா காலகட்டம் என்பதால் 14,000 பேருந்துகள் மட்டுமே சென்று கொண்டிருந்த நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளது என்றார்.

இதேபோல் பொதுமக்கள் திரும்பி வருவதற்கு 17,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்றார். ஆகவே தமிழக அரசின் ஏற்பட்டால் பொதுமக்கள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர் எனும், குறிப்பாக தமிழகம் முழுவதும் 12 மண்டல இணை, துணை போக்குவரத்து ஆணையர்கள் தலைமையில் 1883 ஆம்னி பேருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் 333 பேருந்துகளில் குறை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் இதுவரை 5 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார். வாகன வரி தொகை 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். குறிப்பாக 7 பேருந்துகள் முறைகேடு புகாரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக ஆர்டிஓ அதிகாரிகள் மூலம் சோதனை மேற்கொண்டு உடனடியாக அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.