கடந்த பல ஆண்டுகளாக  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த 2 ஜி ஸ்பெட்ரம் வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார்.

முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியின் போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தததில் பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததது.இதனால் அரசுக்கு 1 கோடியே 76 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு,  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, தி.மு.க எம்.பி. கனிமொழி, தொலைத்தொடர்புத் துறை செயலாளர்கள், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில்இருக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வந்தது.வழக்கு விசாரணையின் போது ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

 இந்த வழக்கு தொடர்பான அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஓ.பி.சைனி  அறிவித்திருந்தார்.

ஆனால் தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை என்பதால் வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும்  என நீதிபதி ஓ.பி.சைனி  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் தப்புவார்களா ?