ஒட்டன்சத்திரம் அருகே தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்  முள் புதரில் மர்மமான முறையில் இறந்துள்ளார். காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே  பூலாம்பட்டி ராயல் கிளாசிக் பனியன் கம்பெனி அருகே முள் புதரில் இரண்டு தினங்களுக்கு முன்பு 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழிகிய நிலையில் கிடப்பதாக தகவல் அறிந்து கள்ளிமந்தயம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் இந்தப் பெண் வேடசந்தூர் தாலுக்கா வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி ஊரை சேர்ந்த ஜெயஸ்ரீ வயது (24) என்பதும், இவர் ராயல் கிளாசிக் பனியன் கம்பெனியில் இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இவரை காணவில்லை என்று இவரது பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்ததும், இதற்கிடையில் அவர் மர்மமான முறையில் முள் புதரில் சடலமாக கிடந்ததும்  தெரியவந்துள்ளது. 

இந்தநிலையில் கள்ளிமந்தையம் காவல் துறையினர் ஜெயஸ்ரீயே யாரேனும் கற்பழித்து கொலை செய்து வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து அவருடன் பணிபுரிந்த கணக்கம்பட்டியை சேர்ந்த தங்கதுரை மற்றும் அவரது நண்பர் ஜெகதீஸ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இளம் பெண் முள் புதரில்   சடலமாக மீட்கப்பட்டுள்ளு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.