இந்தியாவின் 17வது பிரதமாரக குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார் மோடி. அவருடன் மத்திய அமைச்சர்களுக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். இலாகாக்களை அறிவிக்காத 24 பேர் கேபினட் அமைச்சர்களாவும் பதவியேற்றுக் கொண்டனர். 

மத்திய அமைச்சர்களாக மத்திய அமைச்சராக பதவியேற்றார் ராஜ்நாத் சிங். அமித்ஷா, நிதின் கட்கரி, கர்நாடகவை சேர்ந்த சதானந்த கவுடா, தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீத்தாராமன் ஆகியோரும் பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டனர். கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் பதால், தவார் சந்த் கெலாட் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். வெளியுறத்துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

உதரகாண்ட் முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால், ஜார்ஜ்கண்ட் முன்னாள் முதல்வர் அர்ஜூன் முன்டா ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஸ்மிருதி இரானிக்கு குடியரசு தலைவர் பதவி பிரமானம் செய்து வைத்தார். ஹர்ஷவர்தன், பிரகாஷ் ஜவேடகர், ப்யூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அப்பாஸ் நக்வி, பிரஹலாத் ஜோஷி, மகேந்திர நாத் பாண்டே,  அரவிந்த் சாவந்த், பீகார் மாநிலத்தை சேர்ந்த கிரிராஜ் சிங், கஜேந்திர சிங் ஷகாவத், ஆகிய 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்,