சோனியா காந்திக்கு எதிராக கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று  ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினிமா செய்தார். அதைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனால் தற்காலிக தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்றார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் முழு அளவில் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு துடிப்பான தலைமை தேவை எனக் கருதுவதாகக் கூறி குலாம் நபி ஆசாத் சசி தரூர் உள்ளிட்ட 23 மூத்த நிர்வாகிகள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். அதைத் தொடர்ந்து காரிய கமிட்டி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி தற்காலிக தலைவர் சோனியா காந்தி இன்று கூடி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக தொடர தனக்கு விருப்பமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால், சோனியா காந்தி மீண்டும் முழு நேர தலைவராக வேண்டும் என்று சில மூத்த தலைவர்களும் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, 23 சீனியர் தலைவர்கள் கடிதம் எழுதியது தொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில்;-  சோனியா காந்திக்கு எதிராக கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று  ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ராகுல் காந்தி கூறிய இந்த கருத்து சீனியர் தலைவர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக ஒரு கருத்தை கூறியதில்லை. ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி கண்டோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். அதேபோல், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை ராகுல்காந்தி நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் என்று குலாம் நபி ஆசாத் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதனால், தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.