நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையுடன் தொடங்கியது. 2017ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர், இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல் முறையாக ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைந்து ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,, நாடாளுமன்றத்தில் பேசியதாவது:-

கடந்த ஆண்டுகளில் மின்சாரம் இல்லாத 11 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதி செய்யப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டம் மூலம் 26 கோடி பேருக்கு, வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. சமூக நலத்திட்டம் மூலம் 13 கோடி பேர் பயனடைந்துள்ளனர். சுய உதவிக்குழுவினருக்கு 16,000 கோடி வரை கடன் வழங்கப்பட்ள்ளது. முத்ரா திட்டம் மூலம் 5.6 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்பது உள்பட நடத்தி முடித்த பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.