ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கினார்.
தமிழகத்தில் நலிந்தோரின் குடும்பங்களுக்கு 2000 ரூபாய்  உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் அடுத்ததுத்து நாடாளுமன்றத் தேர்தல் வந்நதால் அவரை நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில்  ஈரோட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்யைன், தமிழகத்திலேயே முதல் முறையாக கோபி நகராட்சியில் தந்தி வடம் மூலமாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

சித்தோடு - சத்தியமங்கலம் சாலை விரிவாக்கப்பணி விரைவில் நடக்கும். இதை போல் கோபி புறவழி சாலை ரூ.19 கோடிமதிப்பில் அமைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த பணியும் தொடங்கும். கோபி இந்திரா நகரில் உள்ள ஏரி சீரமைக்கப்பட்டு சுற்றுலா தலம் கொண்டு வரப்படும். 6 மாதத்தில் இந்த பணி முடியும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் நீர் வீழ்ச்சியில் கூட திடீர் திடீரென அவ்வப்போது மேலே இருந்து கற்கள் விழும் ஆனால் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் பன்னீராக விழுகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் உடைகள் மாற்ற தனித்தனி அறைகள் கடடப்படும். விடுமுறை நாட்களில் கொடிவேரி அணைக்கு 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள சுற்றுலா பூங்கா விரிவாக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் தங்கி அமர்ந்து செல்ல கலை அரங்கம் கட்டப்படும்.

தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வமும் ஒரே தலைமையாக செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக நிறைவேற்றி வருகிறார்கள். தமிழகத்தில் நலிந்தோருக்கான ரூ.2 ஆயிரம் விரைவில் வழங்கப்படும். 1 கோடி பேருக்கு வீடு வீடாகச் சென்று இந்த 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கியது. தமிழக அரசு தான் என தெரிவித்தார்.

கல்வி துறைக்கு இந்த அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.கல்விக்காக விரைவில் தனி தொலைகாட்சி தொடங்கப்பட உள்ளது. ‘கியூ ஆர்’ கோடு மூலம் செல்போன் மூலம் பாடத்தை டவுன் லோடு செய்து படித்து கொள்ளலாம். இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டு உள்ளது. இதை மற்ற மாநிலத்தவர்களும் பாராட்டும் அளவு உள்ளது.

பிளஸ்-2 படித்த உடனேயே ஆங்கிலத்தில் மாணவர்கள் பேசுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்..