Asianet News TamilAsianet News Tamil

வந்து விட்டது 2000 ருபாய் நோட்டுக்கு ஆப்பு.!!

2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய ஏழைகளை அதளபாதாளத்திற்கு தள்ளியிருக்கிறது. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள்  இனிமேல் வங்கி பரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஏடிஎம் மட்டும் தானா என்றால் இல்லை. வங்கி கணக்குகளிலும் ரூ2000 செலுத்த தடை விதித்திருப்பது பலருக்கும் ஷாக் அடித்திருக்கிறது.

2000 Rupee Bank Note. !!
Author
India, First Published Feb 21, 2020, 11:05 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

T.Balamurukan
பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடிக்க தேர்தல் அறிக்கையில் சொன்ன விசயங்களில் முக்கியமானது கருப்பு பணத்தை மீட்போம் என்று.அந்த பணத்தை ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15லட்சம் டெப்பாசிட் செய்வோம் என்று கூறியது. இதை பல்வேறு கட்சிகளும் அவ்வப்போது பாஜக அரசின் மீது விமர்சனம் செய்வதற்கு பயன்படுத்தி வருகிறர்கள். கள்ளப்பணத்தை ஒழிக்கபோறேன் என்று பிரதமர் மோடி ரூ500 ரூ1000 தாள்கள் எல்லாம் செல்லாது என்று ஒரே நாள் இரவில் இந்திய மக்களை நடுத்தெருவில் அலையவிட்டார். 

2000 Rupee Bank Note. !!
புதிய ரூ2000 ரூ500 தாள்களை வெளிட்டு கருப்பு பணத்தை மீட்கவும், நாட்டில் உள்ள தீவிரவாதத்தை ஒழிக்கவும் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி. ஆனால் புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்தது ஏழைகளை வாட்டி வதைத்தது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கியது. வங்கி மேலாளர்கள் இந்த அதிரடி அறிவிப்பால் கோடீஸ்வரர்கள் ஆனது தான் மிச்சம். இன்னும் ஏழை மக்கள் ஏழைகளாகவே பொருளாதார சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டு தான் இருக்கிறர்கள்.

2000 Rupee Bank Note. !!
அயல்நாடுகளில் எல்லாம் ரூபாய் நோட்டுக்களை மாற்றியதால் என்ன மாதிரியான பொருளாதார சரிவை சந்தித்தது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடித்தார்கள். அது தான் இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது. கருப்பு பணத்தை ஒழித்ததாக சொல்லும் மத்திய அரசு விலைவாசி உயர்வு தனிமனிதனின் வருவாய் உயர்வு இது எதுமே அதிக்க பொருளாதார மாற்றம் செய்யவில்லை. இந்த நிலையில் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையில் இந்தியாவின் பட்ஜெட் அரங்கேறியது வேறு விசயம்.
2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய ஏழைகளை அதளபாதாளத்திற்கு தள்ளியிருக்கிறது. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள்  இனிமேல் வங்கி பரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஏடிஎம் மட்டும் தானா என்றால் இல்லை. வங்கி கணக்குகளிலும் ரூ2000 செலுத்த தடை விதித்திருப்பது பலருக்கும் ஷாக் அடித்திருக்கிறது. இந்த நடைமுறை மார்ச் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

2000 Rupee Bank Note. !!
சமீபகாலமாக ரூ2000 தாள்கள் புழக்கத்தில் இல்லாமல் பண முதலைகளிடம் முடங்கிவிட்டது.மீண்டும் கருப்பு பணம் பதுக்கல் வந்து விட்டது என்று ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் பிரதமரை நக்கல் செய்தார்கள். அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த ரூ2000 நோட்டு ஒழிப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. எந்த நோட் வந்தாலும் முதலில் போய் சேரும் இடம் இந்தியாவை வழிநடத்து தொழில் அதிபர்கள் வீட்டில் தான்.அதுக்கு எடுத்துக்காட்டு பணமதிப்பிழப்பு வந்த போது புதிய நோட்டுக்கள் மணல் கடத்தல் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி கைப்பற்றியது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறியது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios