Asianet News TamilAsianet News Tamil

கூண்டோடு சிக்கிய 200 எம்.பி,- எம்.எல்.ஏ.,க்கள்... உச்சநீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு..!

மாநில உயர் நீதிமன்றங்கள் வழங்கிய விவரங்களின்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 175 வழக்குகள் எம்பி எம்எல்ஏக்கள் மீது உள்ளன என்றும் சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.
 

200 MPs trapped in cage - MLAs ... Action decision taken by the Supreme Court
Author
Tamil Nadu, First Published Sep 16, 2020, 2:34 PM IST

பாஜகவை சேர்ந்த அஸ்வானி உபாத்யாயே என்ற வழக்கறிஞர் நாடு முழுவதும் உள்ள முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவாக விசாரிக்க கோரி மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள முன்னாள் மற்றும் பதவியிலிருக்கும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீது இருக்கும் வழக்குகளை விசாரணை விசாரித்து விவரங்களை தாக்கல் செய்ய செய்யவும் மாநில மாநில வாரியாக வழக்குகளின் விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டது.இதன்படி சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.200 MPs trapped in cage - MLAs ... Action decision taken by the Supreme Court

கடந்த 10ஆம் தேதி நடந்த விசாரணையின்போது மாநில உயர் நீதிமன்றங்கள் 12ஆம் தேதிக்குள் எம்பி எம்எல்ஏக்கள் மீது சிறப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்து விவரங்களை உச்சநீதிமன்றத்திற்கு வழங்குமாறு உத்தரவை பிறப்பித்தது. மாநில உயர் நீதிமன்றங்கள் வழங்கிய விவரங்களின்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 175 வழக்குகள் எம்பி எம்எல்ஏக்கள் மீது உள்ளன என்றும் சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.200 MPs trapped in cage - MLAs ... Action decision taken by the Supreme Court

வழக்கின் விவரங்களை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிறப்பு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப் படவில்லை என்பதை காட்டுகிறது. இதனால் பாதி எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. எனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதில் நீதிமன்றங்களில் தெளிவு இல்லாத காரணத்தினால் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றமும் பதவியில் இருக்கும் எம்பி எம்எல்ஏக்களின் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க ஒரு நீதிமன்ற அதிகாரியை அமைக்க கோரி மாவட்டந்தோறும் நியமிக்கலாம். 200 MPs trapped in cage - MLAs ... Action decision taken by the Supreme Court

இது போன்ற பல கட்டுப்பாடுகளின் கீழ் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிக்க  உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகள் குறைந்தபட்சம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios