20 ministers agaist sasikala and dinakaran
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா குடும்பத்திற்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. அதில் பேரிடியாக சசிகலா ஆதரவு அமைச்சர்களில் முக்கியவரான மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தினகரனுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 20 அமைச்சர்கள் பங்கேற்றதால் கலங்கி போயுள்ளது சசிகலா வட்டாரம்.
அமைச்சர்கள் மட்டுமன்றி 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் , எம்பிக்கள் கலந்து கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தங்கமணி, வேலுமணி , ஜெயக்குமார், ஒ.எஸ் மணியன், எம்.ஆர். விஜயபாஸ்கர், வீரமணி, சரோஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சியில் தினகரன் தலையீடு இருக்ககூடாது என இவர்கள் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாவது உறுதி.
