2 women congras carders suspended the footsteps of Sathiyamurthy Bhavan
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கைகலப்பு சம்பவம் தொடர்பாக 2 பேரை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அடிப்படை பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமுர்த்தி பவனில், கடந்த வாரம் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் மேதல் சம்பவம் ஏற்பட்டது.
மகளிர் காங்கிரஸ் அணி தலைவி ஜான்சிராணி மற்றும் ஹசீனா ஆதரவாளர்கள் ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதலில் ஜான்சிராணி கடுமையான தாக்கப்பட்டார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் பல பிரிவினைகள் உள்ளன. இதில் மகளிர் கங்கிரஸ் அமைப்பிலும் பல பிரிவுகள் உருவாகி வருகிறது. குஷ்பு அணி, நக்மா அணி என ஏற்கனவே இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
மகளிர் காங்கிரஸ் அணி தலைவியாக இருந்த விஜயதாரணி கடந்த ஜனவரி மாதம் நீக்கப்பட்டு, ஜான்சிராணி நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த பதவிக்கு பலரும் போராடி வருகின்றனர். அதில் ஒருவர் நக்மா அணியை சேர்ந்த ஹசீனா.
கடந்த வாரம் சத்யமூர்த்தி பவனில் மகளிர் அணி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஹசீனா ஆதரவாளர்கள் ஜான்சிராணியை கடுமையான வார்த்தைகள் கொண்டு திட்டியுள்ளனர்.
இது ஜான்சிராணிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜான்சிராணியும் பதிலுக்கு பேசியுள்ளார். இதையடுத்து இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டு, ஜான்சிராணி கடுமையாக தாக்கப்பட்டார். ஆண்களும் சிலர் புகுந்து தாக்குதலில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மகளிர் அணியை சேர்ந்த கொளரி கோபால், முகமது சையத் கியாஸ் உல்ஹக் ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சாதாரண வாக்குவாதத்தில் தொடங்கிய இந்த சண்டை கொலை சம்பவமாக மாறும் நிலை இருந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் பாதிப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
