Asianet News TamilAsianet News Tamil

திருமாவளவனுக்கு 2 சீட்... திமுகவின் பிடிவாதம் தளர்ந்தது எப்படி..? மு.க.ஸ்டாலின் போட்ட கிடுக்குப்பிடி..!

திமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும், திருமாவளவனும் கையெழுத்திட்டு உள்ளனர். 

2 seats for vck because of condition for dmk
Author
Tamil Nadu, First Published Mar 4, 2019, 11:59 AM IST

திமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும், திருமாவளவனும் கையெழுத்திட்டு உள்ளனர். 2 seats for vck because of condition for dmk

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகள் கேட்பதாகக் கூறப்பட்ட நிலையில் விசிகவுக்கு 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திமுக இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை விசிகவுக்கு ஒதுக்கி உள்ளது. திமுக கூட்டணி நலம் கருதி எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது கலந்து ஆலோசனை நடத்தப்படும். திமுகவினரோடு கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். 2 seats for vck because of condition for dmk

ஏற்கெனவே தனிச்சின்னத்தில் போட்டியிட்டு இருக்கிறோம். இப்போது உள்ள சூழலையும் கூட்டணியின் நலனையும் மனதில் கொண்டு எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து கலந்து பேச வேண்டியிருக்கிறது. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி அதன் பின்னர் அறிவிப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

 2 seats for vck because of condition for dmk

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ’’விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க திமுக தலைமை முன்வந்தது. விடுதலை சிறுத்தைகள் இரண்டு சீட்டுகள் கேட்டு பிடிவாதாமாக இருந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் ஒரு சீட், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் இரண்ட்யு தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக தலைமை கூறி இருக்கிறது. அதனை ஏற்று திமுக சின்னத்தில் போட்டியிடுவதாக ஒப்புக்கொண்டு விசிக இரண்டு சீட்டுகளை பெற்றுள்ளது’’ என்கின்றனர். ஆக மொத்தத்தில் விசிக மக்களவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios