2 mla meeting with dinakaran

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினரனுக்கு ஏற்கனவே 11 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் தற்போது மேலும் 2 எம்எல்ஏக்கள் தினகரனின் அடையாறு இல்லத்துக்குச் சென்று நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக தற்போது மூன்றாக உடையும் நிலை உருவாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்த அவரின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் கட்சியைப் கவனித்து வந்தார். ஆனால் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது இரு அணிகளும் இணைவதாக இருந்தால் நான் கட்சிப் பணிகளில் இருந்து விலகிக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

ஆனால் கடந்த வெள்ளிக் கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தினகரன், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர்கள், தினகரனை கட்சிக்குள் அனுமதிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன், உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அதிமுக மூன்றாக உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கலசபாக்கம் பன்னீர் செல்வம், செய்யாறு மோகன் ஆகியோர் இன்று டி.டி.வி.தினகரனை அடையாரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்