Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் ஓராண்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு? அமைச்சர் தங்கம் தென்னரசு சுவாரஸ்ய தகவல்!!

தமிழகத்தில் ஓராண்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

2 lakh people will get employment in tamilnadu says
Author
Chennai, First Published May 27, 2022, 4:38 PM IST

தமிழகத்தில் ஓராண்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்காலி பணியாளர்கள், தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் வேலைக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற சூழலில் அந்தந்த மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகும் போது அந்தந்த மாநிலத்திற்கு முன்னுரிமை தந்து அந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் பெரும்பான்மையான பணிகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு ஏற்றவகையில் தேவையானால் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

2 lakh people will get employment in tamilnadu says

இந்த நிலையில் தொழில் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து புதிய அன்னிய முதலீடுகள், புதிய முதலீடுகளை பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. இந்நிலையில், ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

2 lakh people will get employment in tamilnadu says

சுவிஸ்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார பெருமன்ற மாநாட்டில்  தமிழக குழு பங்கேற்ற பின் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழ்நாடு தொழில்துறை சார்பாக சுவிஸ்சர்லாந்து உலக பொருளாதார மன்ற நிகழ்வில் 50 நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினேன். உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சந்திப்புகள் நடைபெற்றன. தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்குவது குறித்து பேசப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சுவிஸ் பயணம் அமைந்தது. பொருளாதார வளர்ச்சியுடன், சமூக வளர்ச்சியையும் அடையும் வகையில், திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புதிய முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios