பாமக தலைவராக அன்புமணி பதவியேற்றதில் இருந்து அக்கட்சியில் முதல் நடவடிக்கையாக இரண்டு மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாமக தலைவராக அன்புமணி பதவியேற்றதில் இருந்து அக்கட்சியில் முதல் நடவடிக்கையாக இரண்டு மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தென்சென்னை கிழக்கு பாமக மாவட்டச்செயலாளர் பதவியிலிருந்து மந்தைவெளியை சேர்ந்த ர.ஸ்ரீராம் ஐயர் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதோடு விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார்.

அதேபோன்று, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க. 2.0 என்பது சரியாகப் பணியாற்றாத நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்று அன்புமணி கூறி ஒரு நாள்கூட முடிவடையாத நிலையில், வந்தவுடன் இரண்டு மாவட்டச் செயலாளர்களை நீக்கியுள்ளது அக்கட்சியில் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- 20 ஆண்டுகளாக அதிமுகவின் தீவிர விசுவாசி.. திடீரென திமுகவில் இணைந்தார்.. என்ன காரணம் தெரியுமா? அவரே சொன்ன பதில்