Asianet News TamilAsianet News Tamil

அதிரடி ஆட்டத்தைத் தொடங்கிய ரமேஷ்குமார் ! எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு !!

கர்நாடக மாநிலத்தின் சுயேச்சை மற்றும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை அதிரடியாக தகுதி நீக்கம் செய்தது சபாநாயகர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

2 congress and 1 independent mlas disqua;ified
Author
Bangalore, First Published Jul 25, 2019, 9:03 PM IST

கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர்  குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் சிறுதொழில் துறை அமைச்சராக  இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். 

இதைத்தொடர்ந்து கர்நாடக அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்களால், குமாரசாமி அரசு பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை பறிகொடுத்தது.

2 congress and 1 independent mlas disqua;ified

இதனிடையே    பென்னுர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏவான  சங்கரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு  அளித்து இருந்தது. கடந்த ஜூன் மாதம் சங்கர் தமது கே.பி.ஜே.பி. கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். 

2 congress and 1 independent mlas disqua;ified

அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  அவர் குமாரசாமி அரசுக்கு  அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி சங்கருக்கு எதிராக சபாநாயகரிடம் காங்கிரஸ் சார்பில்  மனு அளிக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து  கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்  சுயேட்சை  எம்.எல்.ஏ  ஆர். சங்கர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். 

2 congress and 1 independent mlas disqua;ified

இதே போல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜர்கிஹள்ளி மற்றும் மகேஷ் குமட்டஹள்ளி  ஆகிய இருவரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் பரிசீலனையில் இருப்பதாகவும் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios