Asianet News TamilAsianet News Tamil

1 டீ... 2 வடை... பாஜகவுக்கு கொங்குநாடு... திமுகவுக்கு ஒன்றியம்... ஆபத்தை விளைவிப்பது அறிவாலயமா..? கமலாலயமா..?

கொங்கு நாடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் பதிவிட்டது இப்போது தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது. தமிழ்நாடு மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்படப் போகிறது என்று எங்கும் ஒரே பேச்சு. 

1tea ... 2 Wada ... Kongu nadu for BJP ... Union for DMK
Author
Tamil Nadu, First Published Jul 10, 2021, 3:37 PM IST

கொங்கு நாடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் பதிவிட்டது இப்போது தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது. தமிழ்நாடு மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்படப் போகிறது என்று எங்கும் ஒரே பேச்சு.

 1tea ... 2 Wada ... Kongu nadu for BJP ... Union for DMK

ஒன்றியம் என்பதை பாஜகவால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியவில்லையையோ அதே போல் கொங்குநாடு என்பதை திமுகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பலரும் கொக்கரித்து வருகிறார்கள். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் #தமிழ்நாடு #KonguNadu என்கிற இரு ஹேஷ்டேக்குகளும் முதலிடம் பெற்று வருகின்றன.  

இந்நிலையில், கொங்குநாடு என்ற புதிய பிரச்சனையை பாஜக எழுப்புவது மிக ஆபத்தான செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பின்வாசல் வழியாக நுழைய பாஜக முயற்சித்தால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போர்க்களத்தில் போராடுவதை போல் முதல்வர் போராடி தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் என்றும் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். 1tea ... 2 Wada ... Kongu nadu for BJP ... Union for DMK

எல்.முருகனை வைத்து தமிழ்நாட்டை உடைக்க சதி நடப்பதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறி திமுக வெற்று அரசியலை கையில் எடுத்தது. மத்திய அரசை, மத்திய அரசு என்று சொன்னால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகிறது? இது பாஜகவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இப்போது அதற்கு பதிலடியாக கொங்கு நாடு என்கிற கோஷத்தை ஆரம்பித்திருக்கிறது பாஜக. இது திமுகவை ஆதங்கப்படுத்தி உள்ளது.1tea ... 2 Wada ... Kongu nadu for BJP ... Union for DMK

ஆக இரு கட்சிகளுமே வெற்றுக் கோஷத்தை மட்டுமே கையில் எடுத்துள்ளன. கொரோனா தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. விலைவாசி விண்ணை முட்டுகின்றது. இவற்றை எல்லாம் மறைக்கவே மாநில அரசும், மத்திய அரசும் வெற்றுக்கோஷங்களை முழங்கி வருகின்றன என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios